ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


OM SAKTHI எல்லோருக்கும் எடுத்துச் சொல் !!!

டிசம்பர் 2010 -சக்தி ஒளியில் இருந்து ....
1998 ஆம் ஆண்டு ஒருநாள் அன்னை அருள்வாக்கில் நம் சித்தர்பீடத்தின் மத்திய வேள்வி குளுவினர்க்குச் சில அறிவுரைகளையும் ஆணைகளையும் கூறி " இவற்றை எல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்'' என்று கட்டளையிட்டாள்.
அவற்றில் சிலவற்றை உங்கள் கவனத்திற்காக மீண்டும் தொகுத்துள்ளோம்.
செவ்வாடைத் தொண்டர்களுக்கு...
௧. உன் கரும வினை தீருவதற்கு இங்கு வரும்போதெல்லாம் தேங்காய், பழம், பூ, அர்ச்சனை தட்டு வாங்கி அர்ச்சனை செய்து பிரசாதமாக எடுத்து செல்!
௨. தினசரி ஒரு மணி நேரம் அல்லது அரைமணி நேரமாவது என்னை வழிபாடு செய்! என் மந்திரங்களைத் தொடர்ந்து படித்து வா!
௩. மன்றங்களுக்கு செல்லும்போது முழு செவ்வாடையில் சென்று வா! சட்டை ஒரு நிறம் ! வேட்டி இருக்கும்படிச் செல்லாதே !
௪. செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் மகளிர் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது !
வியாழன் , ஞாயிறு நாட்களில் ஆடவர் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது.
௫.செவ்வாடைத் தொண்டன் ஒவ்வொருவன் வீட்டிலும் சக்தி ஒளி, சக்தி மாலை இருப்பது நல்லது.
௬. நீ வாழ வேண்டி வழிபாடு செய்கிறாய். அதற்காகவே மன்றங்களில் வார வழிபாடு.
௭. மன்றங்களுக்குச் சென்று செவ்வாடையில் அர்ச்சனை செய்தால் மட்டுமே உனக்கு பயன் கிடைக்கும்.
௮. மருவத்தூரில் நடைபெறும் விழாக்களில் தவறாமல் கலந்து கொள். ஆண்டிற்கு ஒருமுறையாவது உன் குருவிற்குப் பாதபூசை செய்து கொள்.