ஓம் சக்தி ! பரா சக்தி !
அன்னையின் அருள்வாக்கு:
தருமம் என்பது உன் கருமம்
தீர்க்கத் தான் என்று புரிந்து கொள்!
ஆன்மிகப் பாதை:
" நீ செல்கிற பாதை நல்லதாக இருந்தால் உன் பார்வையும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் நீ தேர்ந்தெடுக்கும் பாதை தீமையானது என்றால் உனக்கு ஆபத்துகளும் தொடரும்.
உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் காலைப் பிடிப்பது போல் காலை வாரிவிடுவார்கள். உன் கழுத்தைப் பிடிப்பது போல் நடித்து உன் கண்ணையே குத்துவார்கள்.
நீ ஆன்மிகப் பாதையினைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினால் அத்தகைய ஆபத்துக்கள் குறைவு."
ஆன்மிகம் என்ற பாதுகாப்பு:
" ஒரு வீட்டிற்குப் பாதுகாப்பு கருதி வாயிற்படியையும், கதவையும் அமைத்து கொள்கிறீர்கள். அதுபோல உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக ஆன்மிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பிறர் துன்பத்தையும் தன துன்பமாக நினைத்து உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்."
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.