ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு



 
 

அகங்காரத்தைப் போக்கிக் கொள்வது உங்கள் கடமை
அருளை நிரப்புவது என் கடமை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

விளக்கும் சித்தமும்:

"விளக்கில் நல்ல திரியும் எண்ணெயும் இல்லாவிட்டால் சிட்டம் கட்ட ஆரம்பிக்கும். சிட்டத்தைத் தட்டி எரிய விட்டாலும் மறுபடியும் சிட்டம் கட்டும்.

அதுபோல மனத்தில் தீய எண்ணம் என்ற சிட்டம் கட்டாமல் இருக்க நல்ல எண்ணம் தேவை."

புலனடக்கம் கட்டுப்பாடு:

ஆசைக்கும் ஓர் அளவு உண்டு:

"இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். பத்துபேர் ஏறுகிற ஒரு படகில் நூறுபேர் ஏறினால் என்னவாகும்? அது போலத்தான் ஆசைகளும்.

பணத்தாசைதான் பிணத்தாசையாக மாறுகிறது.

வயது, எண்ணம், பணம் என இவையனைத்தும் ஓர் அளவு வைத்துக் கொண்டு, இவ்வளவு தான் என்று ஓர் வரம்பு வைத்துக் கொண்டு வாழ வேண்டும்."

Amma's Medical Oracles:

Chronic headache:

A little dry ginger (sukku), pepper and long pepper (thippili) powdered and added to cow's milk or goat's milk should be taken every morning.