ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மனப்பக்குவம் அடையவேண்டும்


"நீ தான் பக்குவம் அடைய வேண்டும். நல்லது கெட்டது உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். எல்லாமே அம்மா தான். அவள் தான் நல்லதும் செய்ய வைக்கிறாள். கெட்டது செய்ய வைக்கிறாள் என்று பேசுகிறீர்கள். நான் அரிசியைக் கொடுத்துவிட்டேன், பானையையும் கொடுத்துவிட்டேன், தீயையும் கொடுத்துவிட்டேன். நீதான் பக்குவமாகச் சோறாக்கி உண்ண வேண்டும்.

எதை எந்தப்பக்குவத்தில் சேர்த்தால் சோறு பதமாக வருமோ அதன்படிச் சமைத்துக் கொள்ள வேண்டும்

. அதைவிட்டுவிட்டு தீயைக் கூடுதலாகவோ, தண்ணீர் குறைவாகவோ, அரிசி கூடுதலாகவோ சேர்த்தால் சோறு எப்படிப் பதமாக இருக்கும்?

உன் ஆன்மா சுத்தமாக இருக்கவேண்டுமானால் உன் மனம் பக்குவப்பட வேண்டும்

." - அன்னையின் அருள்வாக்கு