மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: ஆன்மீகம் என்னும் பயிரை வளர்க்க வேண்டுமானால் தியானம், மௌனம், தொண்டு, தருமம் போன்ற முறைகளால் வளர்க்க வேண்டும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி: அருளும் - பொருளும்: " என்னிடம் அருளை வேண்டி வருகிறவர்கள் பலருக்கு நான் அருளோடு பொருளும் கொடுக்கிறேன். பத்துப் பேர் முதலாளியாகவும் மாறுகிறீர்கள். உடனே கர்வமும் வந்து விடுகிறது. பொருள் வந்ததும் அருள் நழுவிக் கொள்கிறது." இன்றைய உலகின் நிலை: உலக நியதி: "கொடுத்தது கிடைக்காது. நினைப்பது நடக்காது என்பது தான் இந்த உலக நியதி. இதைப் புரிந்து கொண்டு ஆன்மா உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை உள்ளம் வேண்டும். கள்ள உள்ளம் கூடாது."
|