அகங்காரம் ஆபத்து:
" பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆழம் விதைகள் பூமியிலும் வளர்ந்து செடியாகின்றன. கோபுரத்தில் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன.
பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்தைச் செடி நினைக்கலாமா...?
ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.
கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு பறித்து எறியப்படுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேரியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்."