போன பிறப்பில் பிறந்தேன் மகாபலிபுரத்தில்
என்கிறது என் காண்டம்
அப்போ என்னைப் பெற்ற தாயை
இப்போ எங்கும் காணோம்
எப்போ செய்த புண்ணியத்தால்
பிறந்திட்டேன் மீண்டும் ஒரு தாய்க்குப் பாரம்
மறுபிறப்பிலும் இன்னோர் தாயின்
கருவிலே சில மாதம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்நாடகமும் நிறைவாகும்
அப்(பிப்பெப்)போதும் என்னுள்ளேயே இருந்த
தாயை மறந்து திரிந்தாயிற்று பல காலம்
கருணையின் வடிவம் கலியுக அவதாரம்
கண்டாளோ என் சோகம்
பாரினிலே அவதரித்த இந்நேரம்
கண்டேனே அவளை மருவூரில் நானும்
பணிந்திட்டேன் அவள் பாதாரவிந்தம்
இனிப்பிரியேனே அவளை ஒரு போதும்
*************
*************