ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு



 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –02nd June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஒவொருவர் உள்ளத்திலும் ஏற்ற வரும்
ஏற்றமிகு விழாவே தைப்பூச சோதி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

தெய்வத்தை நினைத்து அழுவது:

"இறந்தவர் முன் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். நாடகத்தில் சோகக் காட்சி வந்தால் அழுகிறார்கள். தெய்வத்தை நினைத்தும் அழுகிறார்கள். தெய்வத்தை நினைத்து அழுகிற அழுகைதான் சிறந்தது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

உனக்கு நீயே காப்பு:

"உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எழுத்து, பேச்சு, அனுபவம் எவற்றாலும் என்ன சொன்னாலும் எடுபடாது.

ஐம்புலன்களை அடக்காமல் அலங்காரம், அபிடேகம், அர்ச்சனை இவற்றால் மட்டும் பெரிய பயன் எதுவும் இல்லை.

உள்ளம் தருமத்திற்கு வழிகாட்ட வேண்டும். உள்ளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உழைப்பு இருக்க வேண்டும். உடல் உறுப்பில் ஒன்று பழுது பட்டாலும் துன்பம் உண்டாகும்."

Amma's Medical Oracles:

Chronic headache:

Once in fifteen days one should give fomentation with paddy-husk after applying neem oil to the neck.