ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து – 03rd July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

எல்லா உயிரினங்கட்கும் ஆன்மா உள்ளது. ஆ, உ, ம்
மூன்றின் சேர்க்கையில் ஓம் என்ற ஒலி உள்ளது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

தெய்வ சக்தி நினைத்தாலும் காப்பாற்ற முடியாது:

"மற்றவனை அழிக்க வேண்டிக் காழ்ப்புணர்ச்சியோடு மந்திர ஜெபம் செய்பவர்கள், பொய்,பித்தலாட்டத்துடன் யாகம் செய்பவர்கள் இவர்களைத் தெய்வ சக்தி நினைத்தால்கூடக் காப்பாற்ற முடியாது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

அறிவும் - கண்களும்:

"அறிவும் கண்களும் நல்ல முறையில் செயல்பட வேண்டும், எது நல்லது? எது கெட்டது? என்று தெரிந்து மனக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும்."

Amma's Medical Oracles:

Foods to be included:

Gooseberry, figs, dates and wood apple are good for health.