MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து – 04thJuly 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
நீ படித்த படிப்பும், பொருளும் கூட வராது. பண்பும், பராசக்தியின் பாசமும் தான் உன்கூட வரும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மற்றவர்கள் உங்களிடம் பாசமாக இருக்க...
"ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு உணவும் தேவை; தாயின் பாசமும் தேவை. பருவம் வந்த பெண்ணுக்கும் பாசம் தேவை. உங்களிடம் வேலை செய்யும் வேலையாட்களின் உணவுத் தேவைகளையும், பிற தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொண்டால் உங்களிடம் பாசமாக இருப்பார்கள்.
வயலில் வளர்ச்சி இருந்தால்தான் வயிற்றுக்கு உணவு கிடைக்கும். உங்கள் கண்களில் குளிர்ச்சி இருந்தால்தான் மற்றவர்களின் பாசம் உங்களுக்குக் கிடைக்கும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
பொறுமையும் - சகிப்புத்தன்மையும்:
"உள்ளத்தில் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும். அதற்குப் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டும்."