MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து – 08th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
அது தான் தெய்வம், இது தான் தெய்வம் என்று எங்கும் அலையாதே. உன் ஆன்மா தான் தெய்வம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
பாலும் - பாத்திரமும்:
"பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சுகிறபோது, பாலும் காய்கிறது, பாத்திரமும் தேய்கிறது. வயதாக வயதாக உங்கள் பந்த பாசத்தில் தேய்மானம் இருக்க வேண்டும். அந்தத் தேய்மானம் இருந்தால்தான் ஆன்ம வளர்ச்சி!"
இன்றைய உலகின் நிலை:
இன்றைய நாடு:
"இன்று நாட்டில் ஆன்மிக உணர்வு குறைந்துவிட்டது. தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகிக் கொண்டு வருகிறது. அதனால் தான் அராஜகப்போக்கு, குழப்பம், கொலை, கொள்ளை, கலவரம் முதலான தீமைகள் சமுதாயத்தில் பெருகிவிட்டன. ஆன்மிக உணர்வு இல்லையேல் உலகமே இல்லை மகனே! உலகமே அழிந்து போகும் நிலைக்கு வந்துவிடும் மகனே! ஆன்மிக உணர்வு பெருகித் தெய்வ நம்பிக்கையும், தெய்வ பக்தியும் பெருகினால் தான் நன்மை ஏற்படும் மகனே!"