ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு



ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –13th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

"இயற்கைச் சீற்றம் தணிய
இயற்கை வழிபாடு அவசியம்."

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அடுத்தவன் குறைகளையே பேசிக்கொண்டு இருக்காதே!

"தன் குறைகளை மறைத்துக் கொண்டு, மற்றவர்களின் குறைகளையே பேசுவதில் பயனில்லை. அத்தகைய பேச்சினால் ஒருவன் முன்னேற முடியாது.

ஓட்டக் கப்பலில் செல்பவன் கரையேற முடியாது. பிறர் குறைகளையே பேசித் திரிபவன் ஆன்மிகத்தில் கரையேற முடியாது."


இன்றைய உலகின் நிலை:

பாலும் - குணமும்:

"பசும்பால், எருமைப்பால் இவற்றைக் குடித்தால் அந்ததப் பாலுக்கு ஏற்ற குணம் தான் அமையும். அந்தந்தக் குணத்துக்குத் தக்கபடியே எண்ணங்கள் மாறுபடும். எறிந்த பொருள் திரும்ப நம்மிடமே வருவது போலப் புதிய யுகத்திலிருந்து மறுபடியும் பழைய யுகத்திற்குத் தான் போய்கொண்டிருக்கிறார்கள்."

"இது கலியுகம்! சீக்கிரம் காலியாகும் உலகம்! தற்கொலை உலகம்! முன்பெல்லாம் ஊசி போட்டால் இறந்து விடுவார்கள். இனி மூக்கின் அருகில் மருந்தைச் சுண்டினாலே அழிவு ஏற்படும். மூச்சும் அடங்கும்."

Amma's Medical Oracles:

Foods to be included:

Eat an extract of dried mint, coriander, neem and thulasi leaves boiled in water.