ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
இயற்கையை வணங்குவது தாயை
வணங்குவதற்குச் சமம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
நல்ல எண்ணங்களால் வளர்க்கப்படும் செயல்கள்:
"எரியும் அகல் விளக்கில் தண்ணீர் பட்டால் சட, சட என்ற சத்தம் வரும். விளக்கும் சரியாக எரியாது.
அதே அகல் விளக்கில் தண்ணீரில் விளைந்த பருத்தியினால் செய்த திரி.
தண்ணீரில் விளைந்த எண்ணெய் விளைந்த எண்ணெய் வித்துக்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய்.
தண்ணீரில் விளைந்த மரத்திலிருந்து செய்யப்படும் தீக்குச்சி ஆகியவற்றால் ஏற்றப்படும் விளக்கு நன்றாக எரியும்.
அதுபோல தீய எண்ணம் இல்லாது நல்ல எண்ணங்களால் வளர்க்கப் பட்ட செயல்களால் பலன் உண்டு."
புலனடக்கம் கட்டுப்பாடு:
என் காட்சி உண்டு: "ஒரு வளையத்தினுள் மிருகம் தன் உறுப்புகளை எவ்வாறு ஒடுக்கிக் கொள்கிறதோ அதுபோல ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கினால் என் காட்சி உண்டு; கருணை உண்டு; அமைதி உண்டு."
Amma's Medical Oracles:
Chronic headache: Once in fifteen days, one should have a head bath using shikakkai (Acacia Concinna) powder after applying neem oil. The hair should be dried using benzoin (sambirani) fumes.