ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு: உன் ஆன்மாவே கடவுள். உன் ஆன்மா தான் சக்தி. சக்தி தான் ஆன்மா.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
ஆன்ம பரிபக்குவம் ஏற்படவேண்டும்:
" பாலை நன்றாகக் காய்ச்சிப் பக்குவமான சூட்டில் அதனோடு புளிப்புப் பொருளைச் சேர்க்கும் போது அது தயிராக மாறுகிறது. அந்தத் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது. அது தண்ணீரிலும் மிதக்கிறது.
அதுபோல மனித உடலுக்கு ஆன்மா என்ற புளிப்புப் பொருள் சேர்ந்தால் தான் மனம் பக்குவம் அடையும்.
மோரான பிறகு அது பாலாக மாற முடியாது. அதுபோல மனிதனின் ஆன்மா பக்குவம் அடைந்துவிட்டால் அவன் கெட்ட வழிக்கு மாற முடியாது.
ஆன்மா பக்குவம் அடைய வேண்டுமானால் உலகத்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். தருமம் செய்யவேண்டும். விரதங்களை மேற்கொள்ள வேண்டும்."
மெய் விளையாட்டும் பொய் விளையாட்டும்:
" ஒரு புறம் இங்கே ஆன்மிகம் வளர்கிறது. இன்னொருபுறம் அழிவுகள் வளர்ந்து வருகின்றன. இங்கு நடப்பவை தான் மெய் விளையாட்டு. அங்கு நடப்பவையெல்லாம் பொய்விளையாட்டு.
வேள்வி, வழிபாடு, இருமுடி, தியானம், தொண்டு, விரதம், பூசை, அங்கவலம், பாதயாத்திரை, முதலிய தெய்வீகம், ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகள் மெய்விளையாட்டு.
ஆன்மிகம் தொடர்பான மெய்விளையாட்டில் கலந்துகொண்டால் ஆன்ம முன்னேற்றம் பெறலாம். மற்ற பொய் விளையாட்டுகளில் கலந்து கொண்டால் அழிவு தான் மிஞ்சும்."