அரசியலும், விஞ்ஞானமும் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது. இன்று மக்களின் உள்ளமும், உள்ளத்து உண்ர்ச்சிகளும் பேயாக மாறிவிட்டன. வேலியே பயிரை அழிக்கக்கூடிய நிலைமை உருவாகி வருகிறது. இத்தகைய போக்கினால் இயற்கைச் சீற்றத்தாலும் வெள்ளத்தாலும் அழிவுகள் ஏற்படும். தியானமும் ஆன்மிகமும் தான் அமைதிக்கு வழிவகுக்கும். எங்கும் பணம்! எதிலும் பணம்! என்று அலைந்தால் பிணம் பிணம் என்ற நிலைமை தான் ஏற்படும். குணம் மாறிவிட்டால் குழப்பமேற்படும். குழப்பம் கொலையாக மாறும். அதுவே குழிதோண்டிவிடும்." - அன்னையின் அருள்வாக்கு