"ஆன்மா என்பது தாய்மை உணர்வு. ஆன்மிகம் என்பது தாய்மை உணர்வோடு உயிர்களிடம் அன்பு கொள்வது.
இந்தத் தாய்மை உணர்வு இருப்பதால்தான் தாய்ப்பறவை தன்னையும் காத்துக் கொண்டு தன் குஞ்சுகளையும் காப்பாற்றுகிறது
.அதனால் தான் ஆன்மாவையே அம்மா என்று சொல்கிறார்கள்
.தாய்மை உணர்வு பெண்களிடம் அதிகம் உண்டு
.இது நவநாகரிக காலம்
. இருந்தாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குழந்தைப் பருவத்திலேயே நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகம் தான் தற்போது வளர்ந்து வருகிறது
. அந்த அநாகரிகம் அழிவுக்கு வழிவகுக்கும். ஆன்மிகம் அநாகரிகத்தியும் வெல்லும்." - அன்னையின் அருள்வாக்கு