MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –21st May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
அறம் வளர்த்துத் தொண்டு செய்தால் அரசாலும் வாய்ப்பு உண்டு.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
நினைத்துப்பார்:
"நாம் பிறந்து வளர்ந்து இதுவரை யாருக்கு என்னென்ன நன்மை செய்தோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
ஒரு நாடு சிறப்படைய:
"ஆக்கப்பூர்வமாக வளர வேண்டிய இந்த நாடு வெடிகுண்டு நாடாக மாறிவிட்டது.
கிணற்றில் தண்ணீர் இருந்தால் தான் இறைக்க முடியும், தரையில் பள்ளம் தோண்டி, ஒரு செடியை நட்டு, அதற்கு நீர் பாய்ச்சி, உரமும் இட்டால் தான் செடியும் நன்கு வளரும். செடிக்கு வேலியும் இட்டுப் பாதுகாத்தால் தான் செடியின் பயனை அனுபவிக்க முடியும்.
அதுபோல நாட்டுமக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும், ஆன்மிக உணர்வும் இருந்தால் தான் ஒரு நாடு வளரும். அதன் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். இவை இல்லையேல் நாட்டில் அமைதி குலையும்."
Amma's Medical Oracles: CHEST DISEASES: Cough: Cow's milk directly mixed in a glass with a pinch of turmeric powder should be consumed before it loses its warmth.