MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
Fwd: orkut - 23rd June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –23rd June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
எந்த நாடு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, தாய்ப்
பாசத்திற்கு மதிப்பு கொடுக்கிறதோ அந்த நாடே செழிப்பாக இருக்கும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
எவனையும் அலட்சியப் படுத்தாதே:
"பிறரைக் குறை சொல்கிற பழக்கம் கூடாது. யாரையும் அலட்சியப் படுத்தக் கூடாது. சிறு துளியும் பேரு வெள்ளமாக மாறும். சிறிய உளியும் மலையை உடைக்கும். சிறிய உருவமும் பெரிய உருவத்தை அழிக்கும். இவனால் என்ன ஆகும்? என்று எவனையும் அலட்சியப்படுத்தாதே!"
புலனடக்கம் கட்டுப்பாடு:
கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்துவிட்டு....
"உணவையும் கட்டுப்படுத்தி உண்ண வேண்டும். மனத்தையும் கட்டுப்படுத்தி வாழ வேண்டும். எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வேண்டும். அப்படியெல்லாம் வாழ்வதை விட்டுச் சோதிடம் பார்த்தும் குறை தீரவில்லை, கோயிலுக்குப் போயும் குறை தீரவில்லை என வருந்திப் புலம்புவதில் பயனில்லை."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Once a week take ragi porridge, jowar porridge, garlic and palm sugar.