MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –15th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
மற்ற எந்த துறையிலும் முன்னேறி விடலாம்.
ஆன்மீகத் துறையில் எளிதில் முன்னேறி விட முடியாது.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
ஆன்மிகத்தில் பதமும் பக்குவமும் பெறுவது எவ்வாறு?
"மரம், செடி, கொடிகள் இவற்றில் உள்ள இலைகள், பறித்தவுடன் உரமாவது இல்லை. அவற்றைப் பள்ளத்தில் போட்டுப் பல நாள் மக்கிப் பக்குவப்பட்ட பிறகே உரமாகிறது. தலை உரம் என்று பெயர் பெறுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் ஈடுபட்டவுடனையே பக்குவம் வந்து விடாது. பந்த பாசங்களை விட்டு, தான தருமம் செய்து, மற்றவர்களுக்குத் தொண்டு செய்து, உள்ளம் தெளிந்து பக்குவப் பட்ட பிறகே பதமாகலாம்."
இன்றைய உலகின் நிலை:
ஆன்மிகத்தால் தான் கட்டுப்படுத்த முடியும்:
" நாட்டில் அக்கிரமங்கள்,அடிதடி, குத்துவெட்டு, கொள்ளை, குழப்பம் இருக்கும். ஆன்மிகத்தால் தான் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவனுக்குத்தான் எதிர்காலத்தில் பாதுகாப்பு."
Amma's Medical Oracles:
Foods to be avoided:
Salt, oil, tamarind to be taken as less as possible.