MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
தாய்ப்பால் கொடுக்காத காரணத்தால் குழந்தைகளுக்குப் புதுப்புது வியாதிகள் வரும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
நீ செய்வது அனைத்தும் தெரியும்:
"நாம் செய்கிற தொண்டு நம் அம்மாவிற்குத் தெரியவில்லையே! நம் அடிகாளாருக்குத் தெரியவில்லையே! என்றெல்லாம் நினைக்க வேண்டாம். நீ எங்கிருந்துகொண்டு என்ன தொண்டு செய்தாலும் அம்மாவிற்குத் தெரியும். அடிகளாருக்கும் தெரியும். பாலில் தண்ணீரைக் கலந்தாலும், தண்ணீரில் பாலைக் கலந்தாலும் தெரியும்."
இன்றைய உலகின் நிலை:
அரசியலும் விஞ்ஞானமும்:
"அரசியலும், விஞ்ஞானமும் ஆன்மிகத்தை அழிக்க நினைக்கலாம். ஆனாலும் அழிக்க முடியாது. விஞ்ஞானத்தால் வீண் விரயங்கள் தான் ஏற்படும்."