ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு



 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்! 



தாய்ப்பாசம் உள்ள மண் தமிழ்மண்
இயற்கையை நம்புகிற மண் இந்த மண்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

எதிர்ப்பும் தேவை:

"கசப்பு இருந்தால் தான் இனிப்பின் அருமை தெரியும். எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். எனவே, எதிர்ப்பு கண்டு சோர்வடையாதே!"

இன்றைய உலகின் நிலை:

வைரமும் - கண்ணாடியும்:

"ஒரு வைரத்தைக் கொண்டு பல கண்ணாடிகள் அறுக்காலம். அனால், கண்ணாடியிலிருந்து வைரத்தைப் பெற முடியாது. இந்தக் கண்ணாடி போன்றது உலகம். இந்தக் கண்ணாடி உலகம் காளான் உலகமாக மாறிவருகிறது. தானே அழிந்து வருகிறது. இதனைக் காப்பாற்ற முடியாது."